விளையாட்டு
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியனான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வைல்டு கார்டு எனப்படும் சிறப்பு அனுமதியின் பேரில் பங்கேற்ற ஷரபோவா, நான்காவது சுற்றில் லட்வியா வீராங்கனை செவாஸ்டோவா உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய ஷரபோவா, அடுத்த இரண்டு செட்களை 4-6, 2-6 என்ற கணக்கில் இழந்து தோல்வியைத் தழுவினார்.