பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மரணம்

பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மரணம்

பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மரணம்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் ஜேக் மோட்டா தமது 95வது வயதில் மரணமடைந்தார். 

ஜேக் மோட்டா அமெரிக்காவின் பிரபல மிடில்வெயிட் குத்துச்சண்டை வீரர் ஆவர். 1922ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த இவர், 1940ஆம் ஆண்டுகளில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரராக வலம் வந்தவர். குத்துசண்டை மட்டுமின்றி இவர் சிறந்த நகைச்சுவை பேச்சாளராகவும் திகழ்ந்தவர். குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் ‘சீறிப்பாயும் காளை’ என்று அழைக்கப்பட்ட ஜேக், 106 குத்துச்சண்டைகளில் பங்கேற்று, 83 சண்டைகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் 30 சண்டைகளில் நாக்அவுட் முறையில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் 95 வயது நிரம்பிய, ஜேக் மோட்டாவின் மரண அறிவிப்பை அவரது மகள் கிறிஸ்டி மோட்டா தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com