விளையாட்டு
நடுரோட்டில் முதியவரைத் தாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்
நடுரோட்டில் முதியவரைத் தாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்
கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, பொதுமக்கள் முன்பு முதியவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராயுடு மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
31 வயதான அம்பத்தி ராயுடு, ஹைதராபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு, காரில் வேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது. மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில், காரில் ஏன் அவசரமாகச் செல்கிறாய் என முதியவர் ஒருவர், ராயுடுவைப் பார்த்து கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்து காரில் இருந்து கீழே இறங்கி வந்த அம்பத்தி ராயுடு, அந்த முதியவரை தாக்கியுள்ளார். இந்தக் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சீனியர் சிட்டிசனைத் தாக்கிய கிரிக்கெட் வீரர் ராயுடுவுக்கு வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என சில நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.