‘என்னை எப்போதுமே சரியான பாதையில் வழிநடத்துபவர்’ தோனியை புகழ்ந்த சாஹல்!

‘என்னை எப்போதுமே சரியான பாதையில் வழிநடத்துபவர்’ தோனியை புகழ்ந்த சாஹல்!
‘என்னை எப்போதுமே சரியான பாதையில் வழிநடத்துபவர்’ தோனியை புகழ்ந்த சாஹல்!

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் மாற்று அணி வீரர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல் அன்பாக கலந்துரையாடுவார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

அதிலும் குறிப்பாக இளம் வீரர்களோடு தோனி உரையாடுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஆட்டத்திற்கு பிறகு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹாலுடன் தோனி பேசினார்.

இந்நிலையில், அந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்த சஹால் “என்னை எப்போதுமே சரியான பாதையில் வழிநடத்துபவர்” என கேப்ஷன் கொடுத்து தோனியை புகழ்ந்துள்ளார். 

இந்த ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com