கிரிக்கெட்டில் சூதாட்டத்தை அனுமதிக்க பரிந்துரை!
கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் சூதாட்டத்தை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
விளையாட்டுகளில் சூதாட்டத்தை அங்கீகரித்து அதன் மூலம் வருவாயைப் பெருக்க ஏதுவாக, சட்டத்தில் ஏராளமானத் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்காக ஆதார் அல்லது பான் எண்ணை இணைக்கலாம் என்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை முறைப்படுத்துவதற்காக மின்னணு பரிவர்த்தனையை அனுமதிக்கலாம் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளது.
சூதாட்ட விடுதிகளிலும், இணையதள சூதாட்டத்திலும் முதலீட்டை அனுமதிக்க அந்நிய செலவாணி மற்றும் அந்நிய நேரடிய முதலீடு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்றும் வருவாய் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வேலையில்லா திண்டாட்டமும் குறையும் எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.