"உங்களின் சாதனை மகத்தானது" தோனிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் !
இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் செய்த சாதனை மகத்தானது என்று முன்னாள் கேப்டன் தோனிக்கு இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சிப் பெற்று வரும் தோனி இன்று மாலை தனது இன்ஸ்டா பக்கத்தில் "உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்" என பகிர்ந்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பல கிரிக்கெட் வீரர்கள் தோனியின் முடிவை வரவேற்றுள்ளனர்.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் "இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் செய்த சாதனை மகத்தானது தோனி. நாம் இருவரும் இணைந்து 2011 உலகக் கோப்பையை வென்றது என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.