விளையாட்டு
ஆல் இங்கிலாந்து ஓபன்: மகளிர் ஒற்றையர் பிரிவில் அகனே யமகுச்சி சாம்பியன்
ஆல் இங்கிலாந்து ஓபன்: மகளிர் ஒற்றையர் பிரிவில் அகனே யமகுச்சி சாம்பியன்
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடருக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் ஜப்பான் நாட்டு வீராங்கனை அகனே யமகுச்சி. 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் தென் கொரிய வீராங்கனை AN Seyoung-யை வீழ்த்தியுள்ளார்.
21-15, 21-15 என நேர் செட் கணக்கில் அவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 24 வயதான யமகுச்சி இதற்கு முன்னதாக 12 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2021-இல் அவர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார். இந்திய வீரர் லக்ஷயா சென், ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதி போட்டியில் விளையாடுகிறார். கடந்த சில நாட்களில் அவர் விளையாடும் இரண்டாவது பைனல் இது.