இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அலெஸ்டர் குக் விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது தமக்கு வருத்தமான முடிவு தான் என்றாலும் அணிக்கு இதுவே சிறந்த விஷயமாக இருக்கும் என அலெஸ்டர் குக் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த 2012-ஆம் ஆண்டு குக் ஏற்றார்.59 டெஸ்ட் போட்டிகளில்
இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குக் 30 சதங்களை விளாசியுள்ளார்.இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது பெருமை என்று தெரிவித்துள்ளார். குக்கின் விலகலை அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ஜோ ரூட் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற நிலையில் இழந்தது குறிப்பிடத்தக்கது.