150 டெஸ்ட் விளையாடிய முதல் இங்கிலாந்து வீரர்

150 டெஸ்ட் விளையாடிய முதல் இங்கிலாந்து வீரர்

150 டெஸ்ட் விளையாடிய முதல் இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் தொடங்கியது. இது இங்கிலாந்து வீரர் அலெஸ்டயர் குக் விளையாடும் 150வது போட்டியாகும்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டயர் குக், மார்க் ஸ்டோன் மேன் களமிறங்கினர். அலெஸ்டயர் குக்கிற்கு இது 150வது டெஸ்ட் போட்டியாகும். இந்தப்போட்டியில் குக் 7ரன்கள் எடுத்த நிலையில் மிச்செல் ஸ்டார்க் பந்துச்வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். 

அலெஸ்டயர் குக் தனது டெஸ்ட் வாழ்க்கையை இந்தியாவில் தான் தொடங்கினார். தனது 21வது வயதில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான நாக்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுடன் 33 டெஸ்ட், இந்தியா (25), மேற்கு இந்திய தீவுகள் (20), தென்னாப்பிரிக்கா (19),பாகிஸ்தான்(18),இலங்கை(16),நியூசிலாந்து(13),வங்கதேசம் (6) போட்டிகளில் விளையாடியுள்ளார். 150வது போட்டியில் விளையாடும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அலெஸ்டயர் குக் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com