’’பந்து வீசி முரளிதரனின் விரலை  உடைக்கச் சொன்னார் யூசப் ’’ - அக்தர்

’’பந்து வீசி முரளிதரனின் விரலை உடைக்கச் சொன்னார் யூசப் ’’ - அக்தர்

’’பந்து வீசி முரளிதரனின் விரலை உடைக்கச் சொன்னார் யூசப் ’’ - அக்தர்
Published on

சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பவுலர் ஷோயப் அக்தர். 

161.3 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி சாதனை படைத்தவர். 

‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என சொல்லப்படும் அக்தர் கிரிக்கெட் களத்தில் பந்து வீசினால் எதிரே நிற்கும் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அச்ச உணர்வோடு தான் அந்த பந்தை எதிர் கொள்வார்கள். 

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அக்தர் ‘எங்களை நோக்கி பந்தை எறிய வேண்டாம்’ என இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் தன்னிடம் சொல்லியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘உங்களது பந்தை எதிர்கொள்ள முடியாமல் அவுட்டாக விரும்பிய பேட்ஸ்மேன்கள் யாரேனும் உண்டா?’ என நெறியாளர் கேட்க ‘இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் மற்றும் இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் அது போல சொல்லியுள்ளார்கள்’ என தெரிவித்துள்ளார் அக்தர்.

“என்னிடம் அப்படி சொன்னவர்கள் பலர் உள்ளனர். இலங்கையின் முரளிதரன் மற்றும் இந்திய டெய்ல் எண்டர்கள் என்னிடம் வந்து ‘எங்களை அடிக்க வேண்டாம், எங்களுக்கு குடும்பம் உள்ளது’ என்று சொல்வார்கள். முரளிதரன் என்னை மெதுவாக பந்து வீசச் சொல்லி அவுட்டாவார்.

 இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ‘முரளியின் விரலை நீ பந்து வீசி உடைத்து விடு. அவரது சுழலை என்னால் ஆடமுடியவில்லை’ என யூசப் யோஹானா என்னிடம் சொல்லியிருந்தார். நானும் அவர் சொன்னதற்காக பவுன்சர்களை வீசினேன். 

‘நீ வீசும் பந்து என் மீது பட்டால் நான் உயிரிழந்து விடுவேன்’ என உடனடியாக முத்தையா முரளிதரன் சொன்னார்’ என தெரிவித்துள்ளார் அக்தர்.  

தென்னாபிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் கேரி கிறிஸ்டன் இடது கண்ணை அக்தர் வீசிய பந்து தாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com