ராஜஸ்தானுக்கு திரும்பியது த்ரில்லிங்கா இருக்கு: ரஹானே

ராஜஸ்தானுக்கு திரும்பியது த்ரில்லிங்கா இருக்கு: ரஹானே
ராஜஸ்தானுக்கு திரும்பியது த்ரில்லிங்கா இருக்கு: ரஹானே

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என ரஹானே தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு  எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவ்விவகாரம் குறித்து விசாரித்த ஐசிசி, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், போட்டி ஊதியம் முழுவதையும் அபராதமாக விதித்து உத்தரவிட்டது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஸ்மித் .இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஸ்மித் விலகினார். இது தொடர்பாக பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ‘ ஸ்மித்துக்கு பதிலாக ரஹானே கேப்டனாகச் செயல்படுவார் என்று தெரிவித்தார்.

கேப்டன் பொறுப்பு குறித்து பேசிய ரஹானே, கேப்டன் பொறுப்பில் நியமிக்கபட்டதும் நான் மகிழ்ச்சியடைந்தேன், ராஜஸ்தான் அணியை எப்போதும் எனது குடும்பம் போலவே பார்க்கிறேன்.என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய அணி நிர்வாகத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும்  ராஜஸ்தான் அணிக்கு திரும்பியது த்ரில்லிங்கா இருக்கிறது. மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.ராஜஸ்தான் அணி ரசிகர்களுக்கும் எங்களுக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி. வரும் போடிகளிலும் தொடர்ந்து நீங்கள் உங்கள் ஆதரவை வழங்கவேண்டும்” என்றார்.


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com