ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கும் மூன்றவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ரஹானே இடம் பிடிக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்த இரு போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கான மூன்றாவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற கடுமையாக போராடும் என்று தெரிகிறது. இந்த ஆடுகளத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததில்லை என்பதால், அதிக நம்பிக்கையுடன் களமிறங்கும்.
வெளிநாட்டு ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடும் ரஹானே, முதல் இரண்டு போட்டிகளில் சேர்க்கப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாளை நடக்கும் போட்டியில் அவர் களமிறங்குகிறார். ரோகித் சர்மா நீக்கப்படுகிறார். முதல் டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர்குமாரை நீக்கியது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளதால் அவரையும் அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.