“ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றி கடந்த காலம் ஆகிவிட்டது” - ரஹானே
“ஒவ்வொரு தொடரும் முக்கியமானது, ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றி கடந்த காலம் ஆகிவிட்டது” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 5 ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.
“எங்களுக்கு ஒவ்வொரு தொடரும் முக்கியமானது தான். ஆஸ்திரேலியாவில் கிடைத்த வெற்றி கடந்த காலம் ஆகிவிட்டது. தற்போது இங்கிலாந்து அணியுடனான போட்டியில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். இங்கிலாந்து அணியை எளிதாக எடுத்துகொள்ளவில்லை. கேப்டன் விராட் கோலிக்கு உதவுவது என்னுடைய பணி. எப்போது ஆலோசனை தேவை படுகிறதோ அப்போது என்னுடைய பார்வையை எடுத்து வைப்பேன். கோலி அணிக்குள் திரும்பி இருப்பது நல்ல விஷயம். அவருடைய சாதனைகள் நம் அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளார் ரஹானே.

