\
"இந்தியா - இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி"-சவுரவ் கங்குலி !

"இந்தியா - இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி"-சவுரவ் கங்குலி !

"இந்தியா - இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி"-சவுரவ் கங்குலி !
Published on

இந்தியா- இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்- இரவு ஆட்டமாக அகமதாபாத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் ஒரு டெஸ்ட், பகல்- இரவாக நடத்தப்படும் என்றும், அந்த டெஸ்ட் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்தியாவில் இரண்டாவது முறையாக பகல்- இரவு டெஸ்ட் அரங்கேறப்போகிறது. ஐபிஎல் முடிந்த பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளதாகவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கங்குலி தெரிவித்தார். இந்தியாவில் ஏற்கெனவே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேசம் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com