\
ஐபிஎல் 2018: ரெய்னா-கோலி-தவான் லூட்டி!

ஐபிஎல் 2018: ரெய்னா-கோலி-தவான் லூட்டி!

ஐபிஎல் 2018: ரெய்னா-கோலி-தவான் லூட்டி!
Published on

2018ஆம் ஆண்டு ஐபில் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ரெய்னா-கோலி-தவான் ஆகியோர் சந்தித்து கும்மாளம் போட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 7ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதை எதிர்பார்த்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை விளையாடவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் இலங்கையுடனான முத்தரப்பு சுற்றுப்பயணத்தை முடித்துள்ள இந்திய அணி வீரர்கள், அடுத்து ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கவுள்ளனர். 

இதில் இந்திய அணி வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடிய மோதிக்கொள்ள உள்ளதால், அதற்கு முன்னதாக ஒன்றாக சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் தவான் மற்றும் சென்னை அணியின் ‘சின்னத் தல’ ரெய்னா ஆகியோர் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் லூட்டி அடித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ரெய்னா பகிர்ந்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com