\
''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்

''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்

''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்
Published on

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன

சமூக வலைதளவாசிகள் அவ்வப்போது எதாவது ஒன்றை ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள். ஹேஸ்டேக் ட்ரெண்ட், சேலஞ்ச் ட்ரெண்ட் என ட்ரெண்ட்ஸ் பலவிதங்களில் உலாவருகின்றன. சில புகைப்படங்களையும் ட்ரெண்டாக்குவது வலைதளவாசிகளின் பொழுதுபோக்கு. இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது இந்திய கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்ற புகைப்படம். 

தோனி, ஜடேஜா, சாகல், ரோஹித், கோலி, தினேஷ் கார்த்தி, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அச்சு அசலாக வயதான ஆட்கள் மாதிரியே இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் பலரும் நகைச்சுவையாக ஷேர் செய்து வருகின்றனர்.
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com