இந்திய ஏ அணி சூறாவளி ஸ்கோர்: பிருத்வி, மயங்க், கில் வாவ் !
இங்கிலாந்தின் லைசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய ஏ அணி, 458 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஏ அணி போட்டிகளில் இது இரண்டாவது அதிகப்பட்ச ஸ்கோர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, இந்திய ஏ அணி விளையாடி வருகிறது. கடந்த 17-ம் தேதி நடந்த போட்டியில் அந்நாட்டின் போர்டு லெவன் அணியை எதிர்கொண்டு 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய ஏ அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா 70 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களும் இஷான் கிஷான் 50 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் லைசெஸ்டர்ஷைர் அணியுடன் இந்திய ஏ அணி நேற்று மோதியது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்கள் பிருத்வி ஷாவும் மயங்க் அகர்வாலும் அந்த அணியின் பந்துவீச்சாளர்களுக்குத் தண்ணி காட்டினர். வீசிய பந்துகளையும் எல்லாம் விதவிதமாக நொறுக்கித் தள்ளினர். 90 பந்துகளில் 132 ரன்கள் எடுத்த நிலையில் பிருத்வி ஷா அவுட் ஆனார். 106 பந்தில் 151 ரன்கள் எடுத்தி ருந்த நிலையில் காயம் காரணமாக மயங்க் அகர்வால் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த சுப்மன் கில் தன் பங்குக்கு 54 பந்துகளி ல் 86 ரன்கள் விளாசினர். ரிஷப் பன்ட் 13 ரன்களும் தீபக் கூடா 25 பந்துகளில் 38 ரன்களும் எடுத்தனர். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய ஏ அணி, 4 விக்கெட் இழப்புக்கு 458 ரன்கள் குவித்தது.
ஏ அணி போட்டிகளில் இரண்டாவது அதிகப்பட்ச ஸ்கோர் இது. இங்கிலாந்தின் சர்ரே அணி, குளோசஸ்டெர்ஷையர் அணிக்கு எதிராக 496 ரன்க ள் குவித்ததே, ஏ அணி போட்டிகளில் சாதனையாக இருக்கிறது.
பின்னர் களமிறங்கிய லைசெஸ்டர்ஷைர் அணி, 40.4 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 281 ரன்கள் வித்தியாசத்தி ல் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் வேல்ஸ் மட்டும் அதிகப்பட்சமாக 62 ரன்கள் எடுத்தார். இந்திய ஏ அணி தரப்பி ல் தீபக் சாஹர் 3 விக்கெட்டையும் பிரசித் கிருஷ்ணா, ஹூடா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டையும் விழ்த்தினர்.

