ரஜினிகாந்த் ஸ்டைலில் சதம் நிறைவு செய்ததை கொண்டாடிய வெங்கடேஷ் ஐயர்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் சதம் நிறைவு செய்ததை நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலில் கொண்டாடி தீர்த்துள்ளார். அவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை அவரே பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று சதம் விளாசியதும் தனது மனம் கவர்ந்த நாயகன் ரஜினி ஸ்டைலில் ‘சல்யூட்’ அடித்தும், கண்ணாடியை ஸ்டைலாக ரஜினி போல திருப்பி போடுவது போலவும் செய்து அசத்தினார் வெங்கடேஷ்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=304&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fkannan.paranthaman.90%2Fvideos%2F941672336465500%2F&show_text=false&width=560&t=0" width="560" height="304" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக இன்று நடைபெற்ற போட்டியில் 113 பந்துகளில் 151 ரன்களை விளாசினார் அவர். அப்போது தான் ரஜினி ஸ்டைலில் தனது சதத்தை அவர் கொண்டாடி உள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் 370 ரன்களை விளாசி இருந்தார். எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.