பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் ஹமீத் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் இல்லை. 

பாகிஸ்தான் அணிக்கு 7 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3 போட்டிகளில் வெற்றியையும், 3 போட்டிகளில் தோல் வியையும் சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் சத்தித்த போட்டிகளில் 3 முறையும் பாகிஸ்தானே வென்றுள்ளது. அதனால் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானை எளிதாக வெல்லும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com