ஆப்கானிஸ்தானை சுருட்டி இந்தியா வரலாற்று வெற்றி!

ஆப்கானிஸ்தானை சுருட்டி இந்தியா வரலாற்று வெற்றி!

ஆப்கானிஸ்தானை சுருட்டி இந்தியா வரலாற்று வெற்றி!
Published on

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 262 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்தது. பின்னர் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் முரளி விஜய் 105 ((153), ஷிக்கர் தவான் 107 (96), ஹர்திக் பாண்டியா 71 (94) லோகேஷ் ராகுல் 54 (64) மற்றும் புஜாரா 35 (52) ரன்களை குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அந்த அணியில் நபி 24 (44) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் 20 ரன்களுக்குள் அவுட் ஆகினர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பண்டியா மற்றும் இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் பாலோஆன் முறைப்படி 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 103 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிடம் சரணடைந்தது. அந்த அணியில் ஷகிடி 36 (88), அஸ்கார் 25 (58) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்தர ஜடேஜா 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் உமேஷ் யாதவ் 3 மற்றும் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் 2 நாட்களில் இந்திய அணி வெற்றி பெற்றது இதுவே முதன்முறையாகும். அத்துடன் அதிக ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதும் இதுவே முதன்முறையாகும்.

இந்தியா அதிக ரன்களில் வெற்றி பெற்ற விவரங்கள் :

ரன்கள் வித்யாசம்                          எதிர் அணி                            வருடம்

140                                                      பங்களாதேஷ்                        2004

144                                                      இலங்கை                               2009

171                                                      இலங்கை                               2017

198                                                      நியூஸிலாந்து                       2010

219                                                     ஆஸ்திரேலியா                     1998

239                                                     இலங்கை                                2017

239                                                     பங்களாதேஷ்                         2007

262                                                    ஆப்கானிஸ்தான்                   2018

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com