டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்திய இளம் பவுலர் : வரலாறு படைத்த ரஷீத் கான்!

டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்திய இளம் பவுலர் : வரலாறு படைத்த ரஷீத் கான்!

டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்திய இளம் பவுலர் : வரலாறு படைத்த ரஷீத் கான்!
Published on

டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய இளம் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான். இந்த சாதனையை நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் படைத்துள்ளார் அவர். 

289 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் 23 வயதான ரஷீத் கான். அதன் மூலம் மொத்தம் 400 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக 56 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் அவர். 

அவரது 400-வது விக்கெட் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் உடையது. அவரை போல்ட் செய்திருந்தார் ரஷீத். 

டி20 கிரிக்கெட்டில் பிராவோ (553), சுனில் நரைன் (425) மற்றும் இம்ரான் தாஹிர் (420) விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். தற்போது 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ரஷீத் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com