சர்வதேச டி20 போட்டி ரன்குவிப்பில் விராத் கோலியை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் வீரர் முகமது சஷாத் 4ஆவது இடம் பிடித்தார்.
சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டனான விராத் கோலி இதுவரை 48 போட்டிகளில் பங்கேற்று 1709 ரன்கள் குவித்துள்ளார். இந்தநிலையில், அயர்லாந்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் 72 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் வீரர் முகமது சஷாத், 1778 ரன்கள் குவித்து கோலியை முந்தினார். 58 போட்டிகளில் 1778 ரன்கள் குவித்துள்ள சஷாத், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மெக்கல்லம், இலங்கையின் தில்ஷன் மற்றும் மற்றொரு நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் ஆகியோருக்கு அடுத்தபடியாக 4ஆவது இடம் பிடித்துள்ளார்.