டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கனிஸ்தான் தனது முதல் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது.

ஆப்கனிஸ்தான்- அயர்லாந்து இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி கொண்டத் தொடர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய அயர்லாந்து அணி 172 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. அதிகபட்சமாக டிம் முர்டாக் 54 ரன்களும் ஜார்ஜ் டாக்ரல் 39 ரன்களும், ஸ்டிர்லிங் 26 ரன்களும் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அஹமத்சாய் மற்றும் முகமது நபி தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ரஹமத் ஷாவின் சிறப்பான ஆட்டத்தால் 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரஹமத் ஷா 98 ரன்களும் அஸ்கர் ஆப்கான் 67 ரன்களும் எடுத்தனர். அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் தொடர்ந்த அயர்லாந்து அணி அண்ட்ரூ பால்பிரினியின் (82) பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்து அணி 288 ரன்கள் எடுத்தது. 

பின்னர் 149 ரன்கள் இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்திருந்தனர். இந்தப் பட்டியலில் தற்போது ஆப்கானிஸ்தான் இணைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com