\
பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த ஆப்கான்!

பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த ஆப்கான்!

பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த ஆப்கான்!
Published on: 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு அதிர்ச்சிக் கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி, முதல் முறையாகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் இக்ரம் ஃபைஸி (107 ரன்) சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 22.1 ஓவர்களில் 63 ரன்களில் அடங்கியது. 

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 185 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. ஆப்கானின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com