தோனியின் சாதனையை சமன் செய்த ஆப்கானிஸ்தான் கேப்டன்!

தோனியின் சாதனையை சமன் செய்த ஆப்கானிஸ்தான் கேப்டன்!
தோனியின் சாதனையை சமன் செய்த ஆப்கானிஸ்தான் கேப்டன்!

டி20 போட்டிகளில் அதிகப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற கேப்டன் என்ற தோனியின் சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் ஆப்கன் சமன் செய்துள்ளார்.

இந்தியாவின் தலைச் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என பல வெற்றிகளை தனது தலைமையின் கீழ் வாங்கிக்கொடுத்தவர். கடந்தாண்டுடன் சர்வதேசப் போட்டியில் இருந்து தோனி ஓய்வுப்பெற்றுவிட்டாலும், அவரின் சாதனைகளை சொல்லி இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 72 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று 41 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தார். அந்தச் சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்கர் ஆப்கன் சமன் செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் 51 போட்டிகளில் 41 வெற்றிகளைப் பெற்று 81.37 சதவீதம் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

இந்தச் சாதனையை அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற போட்டியின்போது செய்துள்ளார் அஸ்கர் ஆப்கன். டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் வரிசையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 33 வெற்றிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தானின் சர்பராஸ் அகமது 29 வெற்றிகளுடன் 4-வதுஇடத்திலும் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் 27 வெற்றிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com