உலகக் கோப்பைக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான் அணி
2019 உலகக் கோப்பை தொடருக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணி தகுதிப் பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான தகுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மோதின. அயர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. பவுல் ஸ்டிர்லிங்(55), கெவின் ஓபிரையன்(41) ரன்கள் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது ஷாஜத் 54, குல்பதின் நாய்ப் 45 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2019 இல் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை தொடரானது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.
உலகக் கோப்பையில் இடம்பெறும் இரண்டு அணிகளுக்கன தகுதிப் போட்டி ஜிம்பாப்வே நடைபெற்று வந்தது. இதில் ஜிம்பாப்வே உட்பட 4 அணிகள் தகுதி இழந்துவிட்டன. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.