ஆப்கான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து!
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கியுள்ளது.
இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து கிடைத்ததை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். தங்களின் கனவு நனவாக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2000 வது ஆண்டு பங்களாதேஷ் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்தது. இரு அணிகளும் ஏற்கெனவே சர்வதேச ஒருநாள், மற்றும் டி20 போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
ஐசிசி தரநிலைப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ள அயர்லாந்து 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக்கோப்பை போட்டியின்போது பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

