’பொய், அதை நம்பாதீங்க...’ ஆப்கான் வீரர் அலறல் ட்வீட்!

’பொய், அதை நம்பாதீங்க...’ ஆப்கான் வீரர் அலறல் ட்வீட்!

’பொய், அதை நம்பாதீங்க...’ ஆப்கான் வீரர் அலறல் ட்வீட்!
Published on

தனது உடல்நிலை குறித்து வந்த செய்தியை மறுத்துள்ளார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் முகமது நபி. இவர் கடந்து சில நாட்களுக்கு முன் மாரடைப்பு காரண மாக உயிரிழந்துவிட்டதாக சில மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்தச் செய்தி பரவியது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இரங்கல் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். 

இந்நிலையில் இந்த தகவலை மறுத்த முகமது நபி, ’’சில மீடியா நான் உயிரிழந்துவிட்டதாக செய்தி பரப்பியுள்ளன. அது பொய். நான் நன்றாகவே இருக்கிறேன்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

அதோடு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முகமது நபி கிரிக்கெட் பயிற்சி பெறும் சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com