உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்

உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்

உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்
Published on

ஹங்கேரியில் நடைபெற்ற பிரீஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில், 22 வயதான பிரிட்டன் வீரர் ஆடம் பியட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

ஐரோப்பியாவின் ஹங்கேரியில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பிரிட்டனின் 22 வயதான ஆடம் 50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக்  போட்டியில் பந்தய தூரத்தை 26.10 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த வெற்றியை தன்னால் நம்பவே முடியவில்லை என ஆடம் தெரிவித்தள்ளார். முன்னதாக, கடந்த 2015 ம் ஆண்டு இதே பந்தய தூரத்தை அவர் 26.42 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com