ஐஜேபிஎல் கிரிக்கெட் டீமை வாங்கிய  நடிகை

ஐஜேபிஎல் கிரிக்கெட் டீமை வாங்கிய நடிகை

ஐஜேபிஎல் கிரிக்கெட் டீமை வாங்கிய நடிகை
Published on

இந்தியன் ஜூனியர் ப்ளேயர் லீக் போட்டிக்கான ஹைதராபாத்  அணியை தெலுங்கு நடிகையான மஞ்சு லக்ஷ்மி வாங்கியுள்ளார். 


திரைத்துறையில் முன்னணியில் உள்ள நடிகர், நடிகைகள் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது அவர்களின் பார்வை விளையாட்டின் மீது கவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா  அணியை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாங்கினார். தெலுங்கு நடிகர்களான ராம் சரண், அல்லு அர்ஜூன் ஆகியோர் சென்னை பேட்மிண்டன் அணியை வாங்கியிருந்தனர். சமீபத்தில் சிரஞ்சீவி, நாகர்ஜூனா ஆகியோர் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து கேரள கால்பந்து ப்ளாஸ்டர் அணியை வாங்கினர்.  கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை சச்சின் டெண்டுல்கர் கைப்பற்றியிருந்தார். 
 இந்நிலையில், ஐஜேபிஎல் எனப்படும் இந்தியன் ஜூனியர் ப்ளேயர் லீக்  கிரிக்கெட் போட்டி துபாயில் இம்மாதம் 20ம்தேதி நடைபெற உள்ளது இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள ஹைதராபாத் அணியை  வளரும் நடிகையான மஞ்சு ல‌ஷ்மி வாங்கியுள்ளார். 


ஐஜேபிஎல் கிரிக்கெட் போட்டி 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு நடத்தப்படும் போட்டி. இதில் திறமையை நிரூபித்தால் ஐபிஎல் போட்டியில் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com