\
”ஜீவா படத்திலேயே வருண் சக்கரவர்த்தியா?” விஷ்ணு விஷால் பதிவிட்ட வீடியோ

”ஜீவா படத்திலேயே வருண் சக்கரவர்த்தியா?” விஷ்ணு விஷால் பதிவிட்ட வீடியோ

”ஜீவா படத்திலேயே வருண் சக்கரவர்த்தியா?” விஷ்ணு விஷால் பதிவிட்ட வீடியோ
Published on: 

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி. 

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் வருணுக்கு வாழ்த்து சொல்லியுள்ளார். 

விஷ்ணு விஷால் TNCA லீக் ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் உள்ளவர்.

“ஹா..ஹா.. வாழ்த்துகள் வருண் சக்கரவர்த்தி. நீங்கள் இந்திய அணிக்காக விளையாட உள்ளது மகிழ்ச்சி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

அந்த ட்வீட்டில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ஜீவா படத்தின் சில காட்சிகளை அவர் பகிர்ந்துள்ளார். 

அதில் கிரிக்கெட் வீரராக வருண் நடித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com