‘தேசத்தையே ஊக்கப்படுத்திய உங்களுக்கு சல்யூட்’தோனி மற்றும் ரெய்னாவை பாராட்டிய நடிகர் சூர்யா

‘தேசத்தையே ஊக்கப்படுத்திய உங்களுக்கு சல்யூட்’தோனி மற்றும் ரெய்னாவை பாராட்டிய நடிகர் சூர்யா
‘தேசத்தையே ஊக்கப்படுத்திய உங்களுக்கு சல்யூட்’தோனி மற்றும் ரெய்னாவை பாராட்டிய நடிகர் சூர்யா

இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அதனையடுத்து அவரை பின்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சின்ன தல’ ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருவரது அறிவிப்பையும் அடுத்து பலரும் அவர்களை பாராட்டி வருகின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களும் அடங்குவர். 

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சூர்யா தோனியையும், ரெய்னாவையும் பாராட்டியுள்ளார்.

‘தன் கெரியரில் வெற்றியும், மகிழ்சசியான குடும்பமும் மற்றும் சமூகத்திற்கு தன்னால் இயன்றதை கொடுப்பவரும் தான் ஒரு உண்மையான சாதனையாளன். அந்த சாதனையாளன் தான் என் ஹீரோ எம்.எஸ்.தோனி. மற்றும் என் நண்பர் ரெய்னாவும் சாதனையாளர்களில் ஒருவர் தான். 

உங்கள் இருவருக்குமே சிறப்புமிக்க இரண்டாவது இன்னிங்ஸ் காத்திருக்கிறது. தேசத்தையே ஊக்கப்படுத்திய உங்களுக்கு சல்யூட். தேங்க் யூ தோனி ரெய்னா’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சூர்யா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com