நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து கால்பந்தாட்ட பயிற்சி மேற்கொண்ட தோனி
நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஆல் ஸ்டார்ஸ் கால்பந்தாட்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. தற்போது அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை நடிகர் ரன்வீர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘எனது டார்லிங்’, ‘எனது அண்ணனின் காலடியில் எப்போதும்’, ‘எனது ஹீரோ’ என கேப்ஷன்கள் கொடுத்து தோனியுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார் ரன்வீர். இந்த படங்களில் தோனி புதிய லுக்கில் அழகாக தாடியுடன் காட்சி தந்துள்ளார்.
சிறு வயது முதலே தோனிக்கு கால்பந்தாட்டம் என்றால் ரொம்ப இஷ்டம். கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பாக அவர் கால்பந்தாட்ட அணியில் கோல் கீப்பராக செயல்பட்டு வந்தவர். விரைவில் ஆல் ஸ்டார் கால்பந்தாட்டத்தில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து அவர் அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2021 இரண்டாவது பாதி ஆட்டங்களில் விளையாட உள்ளார்.