விளையாட்டு
ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் பிரிவில் சரத் கமல் 3-ஆவது சுற்றுக்கு தகுதி
ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் பிரிவில் சரத் கமல் 3-ஆவது சுற்றுக்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று நடைபெற்றது. இதில் சரத் கமல் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பொலானியாவை எதிர்கொண்டார். இதில் 1-11,11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதித் பெற்றார்.
39 வயதான சரத் கமல் மூன்றாவது செட்டில் உலக சாம்பியனான சீனாவைச் சேர்ந்த மா லாங்கை எதிர்கொள்ளவுள்ளார்.