\
காலில் காயம்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரினா வில்லியம்ஸ் விலகல்

காலில் காயம்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரினா வில்லியம்ஸ் விலகல்

காலில் காயம்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரினா வில்லியம்ஸ் விலகல்
Published on: 

2021 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார் செரினா வில்லியம்ஸ். 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர் இந்த அதிர்ச்சிகரமான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

“மருத்துவர்களின் பரிசீலனைக்கு பின்னர் அவர்களது ஆலோசனையின் படி எதிர்வரும் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து நான் விலகுகிறேன். தொடை பகுதியில் தசை நார் சிதைவு (கிழிவு) காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இப்போதைக்கு நான் அந்த காயத்தை ஆற்ற வேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார் செரினா. 

கடைசியாக கடந்த 2017-இல் அமெரிக்க ஓபன் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. நடால், ஃபெடரர் மற்றும் டொமினிக் திம் மாதிரியான முன்னணி வீரர்களும் 2021 அமெரிக்க ஓபனிலிருந்து விலகி உள்ளனர்.    

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com