விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டியிலிருந்து ரஃபேல் நடால் விலகல்
விம்பிள்டன் மற்றும் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என முன்னணி டென்னிஸ் வீர்ர் ரஃபேல் நடால் அறிவித்துள்ளார்.
20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால், உலக டென்னிஸ் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளார். அண்மையில் நிறைவடைந்த பிரெஞ்சு ஓபன் தொடரில், அரை இறுதியில், முதல்நிலை வீரர் நோவாக் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் உடல்நிலையை கருத்தில் கொண்டு, விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கபோவதில்லை என நடால் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் டென்னிஸ் விளையாட வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக நடால் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக பிரெஞ்சு ஓபன் தொடருக்கும், விம்பிள்டனுக்கும் இடையே குறைந்தது 3 வாரங்கள் இடைவெளி இருக்கும். கொரோனா காரணமாக, பிரெஞ்சு ஓபன் போட்டிகள் தாமதமாக இந்த ஆண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

