இங்கிலாந்தை கதறவிட்ட அப்ரார் அகமது! அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்!

இங்கிலாந்தை கதறவிட்ட அப்ரார் அகமது! அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்!
இங்கிலாந்தை கதறவிட்ட அப்ரார் அகமது! அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மட்டுமில்லாமல், பல சாதனைகளை படைத்து பாகிஸ்தான் அணியை அதிகாரம் செய்தது இங்கிலாந்து அணி. சிறப்பான எதிர் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி பதிவு செய்தாலும், கடைசி 9 ரன்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து டிரா செய்ய வேண்டிய போட்டியை கோட்டை விட்டது பாகிஸ்தான் அணி. ஒருவேளை வெற்றிக்காக பாகிஸ்தான் அணி முயற்சித்திருந்தாலும் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பும் பாகிஸ்தான் அணிக்கு இருந்தபோதும், மோசமான தோல்வியை பதிவுசெய்தது பாகிஸ்தான்.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி நிதானமான தொடக்கத்தை கொடுத்தாலும் ஓபனர் ஷாக் கிராலியை 19 ரன்களுக்கு பவுல்டாக்கி வெளியேற்றி அசத்தினார் அறிமுக பவுலரான அப்ரார் அகமது. பின்னர் அவருடன் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் போட அந்த பார்ட்னர்ஷிப்பையும் பிரித்த அப்ரார் அகமது, தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற, அவரது சுழற்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாத இங்கிலாந்து அணி 231 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்!

அறிமுக வீரராக களமிறங்கிய அப்ரார் அகமது, அறிமுகமான முதல் இன்னிங்ஸிலேயே 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அடைந்தார். அடுத்த மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறுமுனையில் பந்துவீசிய ஷகித் மஹ்முத் கடைசி நேரத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த சாதனையை படைக்கும் வாய்ப்பு அமையாமல் போனது.

53 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தி காட்டிய அப்ரார் அகமது!

1969ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுகப்போட்டியிலேயே முகமது நஷிர் 99 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இதுவரை ஒரு பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் பவுலர் அறிமுகப்போட்டியிலேயே கைப்பற்றிய அதிகபட்ச சாதனையாக இருந்தது.

இந்நிலையில் மீண்டும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய அப்ரார் அகமது, 53 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாதனையை திரும்பவும் செய்து காட்டியுள்ளார்.

முதல் பாகிஸ்தான் வீரராக அப்ரார் அகமது திகழ காத்திருக்கும் வாய்ப்புகள்!

இதுவரையும் ஒரு பாகிஸ்தான் வீரர், அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து ஒரு அறிமுக வீரர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்டுகளாக 7 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதை உடைத்து புதிய சாதனையை படைக்கும் வாய்ப்பு அப்ரார் அகமதுக்கு அமைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com