நிறத்தை வைத்து கிண்டல் செய்வதா? அபினவுக்கு அஸ்வின் ஆதரவு

நிறத்தை வைத்து கிண்டல் செய்வதா? அபினவுக்கு அஸ்வின் ஆதரவு

நிறத்தை வைத்து கிண்டல் செய்வதா? அபினவுக்கு அஸ்வின் ஆதரவு
Published on

நிறத்தை வைத்துக் கிண்டல் செய்வதை மாற்றுங்கள் என்று தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் கூறியிருக்கும் கருத்துக்கு சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர், தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்த், தன் உடல் நிறத்தை வைத்து சிலர் கேலி செய்வதாக கூறியிருந்தார். 
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ’10 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். 15-ம் வயதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி உள்ளேன். எனது நிறத்தை மையப்படுத்தி என்னை பல்வேறு பெயர்களில் கிண்டல் செய்கின்றனர். அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்த்து விட்டு சென்று விடுவேன். தற்போது சமுக வலைதளங்களில் இந்த மாதிரி வசைபாடும் போக்கு
மோசமாகி இருக்கிறது. இன்று நான் எனக்காக மட்டும் இதைப் பேசவில்லை. தங்கள் உடல் நிறம் காரணமாக அவமானங்களை சந்திக்கும் ஏராளமானவர்களுக்காக பேசுகிறேன். இந்த விஷயத்தில் மக்களின் மனநிலை மாற வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

அவருக்கு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘சமுக வலைதளங்களில் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com