சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தென்னாப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் 14ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த டி வில்லியர்ஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 104 பந்துகளில் 176 ரன்கள் குவித்ததால், முதலிடத்திற்கு முன்னேறினார்.
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இரண்டாவது இடத்திற்கும், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திற்கும் பின்தங்கியுள்ளனர். பந்து வீச்சாளர்களில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி முதலிடத்தில் உள்ளார்.