பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு திடீரென்று ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ். அப்போதே, அவர் டி20 லீக் போட்டிகளில் விளையாடத்தான் ஓய்வு பெறப் போகிறார் என்று கூறப்பட்டது. அதே போல, அடுத்த ஆண்டு நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று அவர் கையெழுத்திட்டார். இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அவர் எந்த அணியில் இடம் பெறுவார் என்பது வீரர்கள் ஒதுக்கீட்டின் போது தெரிய வரும்.
Read Also -> இஷாந்த், பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து!
இது குறித்து டிவில்லியர்ஸ், ‘ பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் உலக அளவில் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறது. சமீபகாலமாக நானும் இந்த போட்டிகளை பார்த்து ரசிக்கிறேன். வரும் சீசனில் நானும் இதில் பங்கேற்கிறேன். விரைவில் அந்த தொடர் மூலம் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் எஹ்சன் மணி, டிவில்லியர்சை வரவேற்றுள்ளார். ‘வில்லியர்ஸ் நவீன காலத்தில், சிறந்த வீரர். அவர் இணைவதன் மூலம் இந்த தொடர் மதிப்பு பெறும். அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்பதால், இங்குள்ள இளம் வீரர்கள் அவரிடம் அதிக கற்றுக்கொள்ளவு முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.