\
டி வில்லியர்ஸ் விலகல்: ரசிகர்கள் ஏமாற்றம்!

டி வில்லியர்ஸ் விலகல்: ரசிகர்கள் ஏமாற்றம்!

டி வில்லியர்ஸ் விலகல்: ரசிகர்கள் ஏமாற்றம்!
Published on

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் தனது காலில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரை வென்றது. இப்போது டி20 போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு முன்பாக இடது கால் முட்டியில்  தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் காயமடைந்தார். இதனால் முதல் மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. நான்காவது ஒரு நாள் போட்டியின்போது அணியில் இணைந்தார். காயம் முழுவதும் குணமடையாமல் விளையாடியதால் அது தீவிரமடைந்தது.  

இதனால் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் கடைசி நேரத்தில் விலகினார். இந்நிலையில் தொடரின் மற்றப் போட்டிகளிலும் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com