டிவில்லியர்ஸ் மிரட்டலில் பணிந்தது டெல்லி

டிவில்லியர்ஸ் மிரட்டலில் பணிந்தது டெல்லி

டிவில்லியர்ஸ் மிரட்டலில் பணிந்தது டெல்லி
Published on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டி வில்லியர்சின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.

11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது.இதில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்தப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது. இரு அணிகளும் இந்த சீசனில்  விளையாடியுள்ள 4போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் இரு அணிகளும் நேற்று பலப்பரிட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான காம்பீர், ஜேசன் ராய் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

ஸ்ரேயாஸ் - ரிஷப் கூட்டணி பெங்களூரு பந்துவீச்சை நொறுக்கடித்தது. ஸ்ரேயஸ் ஐயர் 52ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ் வெல் தவறான ஷாட்  அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிஷப் தனியாளாக வெளுத்து வாங்கினார். 85 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 

பின்னர் 175 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணி முதலில் தடுமாறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும் மோசமாக ஆடினர். மனோன் வாரா 2, டி காக் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி 30 ரன்கள் சேர்த்தார். மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் டி வில்லியர்ஸ் அற்புதமாக விளையாடினார். சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.அவரை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி அணி திணறியது. அவர் 39 பந்துகளில் 90 குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். பெங்களூரு அணி இரண்டு ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.டெல்லி அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com