திரைப்படமாகும் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு!

திரைப்படமாகும் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு!

திரைப்படமாகும் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு!
Published on

செஸ் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்த இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை திரைப்படமாக  உருவாக உள்ளது.

பாலிவுட்டில் "தனு வெட்ஸ் மனு", "ராஞ்சனா", உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் ஆனந்த் எல் ராய். இப்போது கூட தனுஷ் - சாரா அலி கான் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் "அத்ரங்கி ரே" திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் ஆனந்த் எல் ராய். விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை திரைப்படத்தையும் இவர்தான் இயக்குகிறார்.

இந்த படம் 2021 ஆம் ஆண்டில் வெளிவர உள்ளது. செஸ் பிரபலம் ஆனந்தின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் இந்தத் திரைப்படம், அவரது குழந்தை பருவம் முதல் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக செஸ் உலகில் அவரது ஆளுமையை விரிவாகப் பேசும் எனக் கூறப்படுகறிது. விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர்.

தற்போது இத்திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் இதுவரை இறுதி செய்யப்படவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com