இந்திய அணியின் லக்கி சார்ம் என பாராட்டப்படும் தீபக் ஹூடா.. எப்படி தெரியுமா?

இந்திய அணியின் லக்கி சார்ம் என பாராட்டப்படும் தீபக் ஹூடா.. எப்படி தெரியுமா?
இந்திய அணியின் லக்கி சார்ம் என பாராட்டப்படும் தீபக் ஹூடா.. எப்படி தெரியுமா?

ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா இந்திய அணியில் இடம் பிடித்து சிறப்பாக ஆடி வரும் நிலையில், தற்போது தனித்துவமான ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் தொடங்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது. நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியை இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த போட்டியில் தீபக் ஹூடா பங்குபெற்று விளையாடிய நிலையில் அவர் தனித்துவமான ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.

இந்திய ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமாகி ஆடி வருகிறார். இந்நிலையில் அவர் அறிமுகமாகி 7 ODI போட்டிகளிலும் மற்றும் 9 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அவர் அறிமுகமாகி ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் அறிமுகமானதில் இருந்து தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்ற வீரர் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறார் தீபக் ஹூடா. இதற்கு முந்தைய உலக சாதனையாக ருமேனியாவின் சாத்விக் நாடிகோட்லா அறிமுகமானதில் இருந்து தொடர்ந்து 15 வெற்றி பெற்று இருந்தது சாதனையாக இருந்து வந்தது.

இந்நிலையில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்த வரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் டேவிட் மில்லரும், ருமேனியாவின் இன்னொரு வீரரும் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர். இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள் இந்திய அணியின் ``லக்கி சார்ம்`` தீபக் ஹூடா என்று பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com