பாகிஸ்தான் ரசிகர்களை மிரளவைத்த விராட் கோலியின் ‘ட்விட்’
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதிவிட்டிருந்த ட்விட் பாகிஸ்தான் ரசிகர்களை மிரள வைத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று, தன்னுடைய ஆசான்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட் பதிவிட்டார். அந்த பதிவில், ‘உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் குறிப்பாக கிரிக்கெட் உலகில் உள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், பல்வேறு பெயர்களுடன் பெரிய பட்டியல் அடங்கிய ஒரு படத்தையும் அதில் அவர் பதிவிட்டு இருந்தார். இதில், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி, ராகுல் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அதோடு, ஷான் பொல்லக், ரிச்சர்டு, ரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன் காலிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
மேலும், பாகிஸ்தான் வீரர்கள் இன்சமாம் உல்-ஹாக், இம்ரான் கான் உள்ளிட்டோர் பெயர்களும் அதில் இடம்பெற்று இருந்தன.
விராட் கோலி இந்த ட்விட் பதிவை அவரது பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் பகிர்ந்தனர். இதனைத்தொடர்ந்து கிரிக்கெட் தெரியாத பாகிஸ்தான் இளைஞர்கள் கூட யார் கோலி என்ற ஹாஷ்டாக்-கை வைரலாக்கும் அளவிற்கு அந்த ட்விட் பிரபலமாகி விட்டது. ஆனால் கோலி வெளியிட்ட பட்டியலில் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ளே பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.