விளையாட்டு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தோல்வி: தேம்பித் தேம்பி அழுத ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தோல்வி: தேம்பித் தேம்பி அழுத ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியின் போது, முன்னணி வீரர் ஜோகோவிச் அழுத வீடியோ வெளியாகி டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேலண்டர் ஸ்லாம் கனவுடன் இறுதிப் போட்டியில் களம் இறங்கிய செர்பியாவின் ஜோகோவிச், ரஷ்ய வீரர் மெட்வடேவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். தோல்வியின் விளிம்பில் இருந்த அவர், மைதானத்திலேயே அழுத வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக விரக்தியில் ஜோகோவிச், தனது டென்னிஸ் மட்டையை தரையில் அடைத்து உடைத்தார்.