காலை ஆஸி, மதியம் இந்தியா, மீண்டும் ஆஸி! யார் தான் முதலிடம்? ICC செய்த பெரும் பிழை!

காலை ஆஸி, மதியம் இந்தியா, மீண்டும் ஆஸி! யார் தான் முதலிடம்? ICC செய்த பெரும் பிழை!
காலை ஆஸி, மதியம் இந்தியா, மீண்டும் ஆஸி! யார் தான் முதலிடம்? ICC செய்த பெரும் பிழை!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்ததாக, ஐசிசியின் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதனை கொண்டாடிய இந்திய ரசிகர்கள் ட்விட்டர் முதலிய அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், இரண்டே மணி நேரத்தில் மீண்டும் ஆஸ்திரேலியா தான் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் என அப்டேட் செய்தது ஐசிசி தளம். தற்போது எந்தவிதமான போட்டிகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் விளையாடாததால் ரசிகர்கள் குழம்பி போயினர்.

ஐசிசி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 8 மணியளவில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும், இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் அறியப்பட்டது. ஆனால் மதியம் 1.30 மணியளவில் ஐசிசி தளத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தக்கவைத்துகொண்டதாக புதிய அப்டேட் விடப்பட்டது.

இதனால் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ரசிகர்கள், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் ஐசிசியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போதைய அப்டேட்டின் படி 115 புள்ளிகளின் படி இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 111 புள்ளிகளோடு இரண்டாம் இடத்திலும், நான்காவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டும், மேற்கிந்திய தீவுகள் எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியும் அப்டேட் வெளியிடப்பட்டது.

2 மணி நேரத்தில் பறிபோன இந்தியாவின் முதல் இடம்!

மதியம் 1.30 மணிக்கு வெளியான அந்த அப்டேட் வெளியாகி 2 மணி நேரம் கூட ஆகாத நிலையில், மாலை 4 மணியளவில் மீண்டும் ஆஸ்திரேலியா அணியே முதலிடத்தில் நீடிப்பதாக புதிய அப்டேட் ஐசிசி தளத்தில் வெளியிடப்பட்டது.

இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள், ஏமாற்றத்துடன் குழம்பி போயினர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது எந்த போட்டியிலும் விளையாடவே இல்லை, பின்னர் எப்படி தரவரிசைபட்டியலில் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்ற பெரிய குழப்பம் நீடித்தது.

4 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவரப்படி 126 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 115 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அப்டேட் செய்யப்பட்டது. இணையதளத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே இது நிகழ்ந்ததாக பின்னர் தகவல் வெளியாகின. இரண்டு மணி நேரத்தில் ஐசிசியின் தரவரிசை பட்டியல் மாறியது இதுவே முதல்முறையாக பார்க்கப்படுகிறது.

எப்போது இந்தியா முதலிடத்தை தக்கவைக்கும்?

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பிப்ரவரி மாதம் பார்டர் கவாஸ்கர் டிரோபியில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருப்பதால், இந்தியா அதில் 2-0 என வெற்றிபெற்றால் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com