”தோனி ஆட்டோகிராப் மேல் என்னுடைய ஆட்டோகிராப்பா?!” - ரசிகருக்கு இஷான் கிஷனின் ரிப்ளை!

”தோனி ஆட்டோகிராப் மேல் என்னுடைய ஆட்டோகிராப்பா?!” - ரசிகருக்கு இஷான் கிஷனின் ரிப்ளை!

”தோனி ஆட்டோகிராப் மேல் என்னுடைய ஆட்டோகிராப்பா?!” - ரசிகருக்கு இஷான் கிஷனின் ரிப்ளை!
Published on
இந்திய கிரிக்கேட் அணி வீரர் இஷான் கிஷானிடம், தோனி ஆட்டோகிராப்பிற்கு மேல் ஆட்டோகிராப் கேட்ட  ரசிகர், மறுத்த இஷான் கிஷான்.
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கிரிக்கட் வீரர் இஷான் கிஷான் வெறும் 131 பந்துகளுக்கு 210 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். அதில் 24 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். அவர் விராட் கோலியுடன் பாட்னர்ஷிப்பில் இணைந்து 290 ரன்களை எடுத்தார். 126 பந்துகளில் இரட்டை சதம் விளாசி உலக சாதனைப் படைத்தது மட்டுமின்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 4ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 
இதனைத் தொடர்ந்து ராஞ்சியில் நடைபெற்ற ரஞ்சி டிராபி குருப் சி போட்டியில் ஜார்கண்ட் அணியில் விளையாடிய கிஷான் கேரளாவிற்கு எதிராகவும் சதம் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அங்கு ரந்திர் குமார் என்ற ரசிகர் கிஷானிடம் அவரின் தொலைப்பேசியின் பின்புறம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். அப்பொழுது அங்கு தோனியின் ஆட்டோகிராப்பை கண்டுள்ளார் கிஷான்.
“இங்கு மாஹி பாய் கையெழுத்து இருக்கிறது, நான் எப்படி அதற்கு மேல் என் கையெழுத்தைப் போட முடியும். நான் இன்னும் அந்த அளவிற்கு வரவில்லை. ஏன் நான் இங்குக் கையெழுத்துப் போட வேண்டும் வேறு எங்காவது போடுகிறேன்” என்றார் கிஷான்.  பின் தோனியின் கையெழுத்துக்குக் கீழ் அவர் கையெழுத்தைப் போட்டார்.
மேலும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் “என்னால் முடியும் பொது எல்லாம் நான் சிறப்பாக விளையாடுவேன். நான் பேச விரும்பவில்லை அதற்குப் பதில் எனது பேட் பேச வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றார்.
- ஷர்நிதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com