சரிவிலிருந்து ஹைதராபாத்தை மீட்ட பார்ட்னர்ஷிப் : பிரியம் கார்க் அசத்தல் அரைசதம்

சரிவிலிருந்து ஹைதராபாத்தை மீட்ட பார்ட்னர்ஷிப் : பிரியம் கார்க் அசத்தல் அரைசதம்
சரிவிலிருந்து ஹைதராபாத்தை மீட்ட பார்ட்னர்ஷிப் : பிரியம் கார்க் அசத்தல் அரைசதம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி விக்கெட்டை இழந்து தடுமாறியபோது, பிரியம் கார்க் - அபிஷேக் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

சென்னைக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் தொடக்க வீரரான ஜானி பேரிஸ்டோவ் டக் அவுட் ஆகி சொதப்பினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் வார்னர் மற்றும் மணிஷ் பாண்டே சற்று நேரம் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மணிஷ் பாண்டே 29 (21) ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் 28 (29) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வில்லியம்சன் 9 (13) ரன்களில் வெளியேற ஹைதராபாத் அணி நிலைகுலைந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த இளம் வீரர்களான பிரியம் கார்க் மற்றும் அபிஷேக் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப்பால் ஹைதராபாத் அணி 150 ரன்களை நெருங்கி சரிவில் இருந்து மீண்டது. 31 (24) ரன்கைல் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழக்க, கடைசிவரை விக்கெட்டை இழக்காத பிரியம் கார்க் அசத்தலாக அரை சதம் அடித்து 51 (26) ரன்களை குவித்தார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com