நோ பாலில் விக்கெட்; வாய்ப்பு கிடைத்தும் சொதப்பிய ஷாபாலி வர்மா! இந்திய அணி தோல்வி

நோ பாலில் விக்கெட்; வாய்ப்பு கிடைத்தும் சொதப்பிய ஷாபாலி வர்மா! இந்திய அணி தோல்வி
நோ பாலில் விக்கெட்; வாய்ப்பு கிடைத்தும் சொதப்பிய ஷாபாலி வர்மா! இந்திய அணி தோல்வி

16 போட்டிகளில் உலகின் நம்பர் 1 டி20 பேட்டராக மாறி சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை தஹ்லியா மெக்ராத்-ஐ, தனது அறிமுக போட்டியிலேயே போல்டாக்கி முதல் விக்கெட்டை எடுத்து அசத்தியுள்ளார் இந்திய வீராங்கனை அஞ்சலி சர்வானி.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்குபெற்று விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 172 ரன்கள் எடுத்திருந்த போதிலும், இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி தங்களுடைய அபாரமான பேட்டிங்கால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தது.

இரண்டாவது போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இருந்தபோதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில், 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு பெரிய தூணாக அமைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிரிதி மந்தனா. அவர் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 79 ரன்கள் சேர்க்க, இறுதியாக வந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் 3 சிக்சர்கள் விளாச போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் களமிறங்கிய ரிச்சா கோஸ் மற்றும் ஸ்மிரிதி மந்தனா இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ரன்கள் சேர்த்தது இந்தியா. 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆஸ்திரேலியாவால் 16 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இந்தியா இரண்டாவது போட்டியை வென்று தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

இந்நிலையில், தொடங்கப்பட்ட மூன்றாவது போட்டியில், இந்தியா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களுக்கு அதிர்ச்சியளித்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள். கேப்டன் அலிஸ்ஸாவை ஒரு ரன்களில் வெளியேற்றினார் ரேனுகா சிங், பின்னர் களமிறங்கிய நம்பர் 1 டி20 பேட்டரான தஹ்லியா மெக்ராத்-ஐ, தனது அறிமுக போட்டியிலேயே பவுல்டாக்கி வெளியேற்றினார் இந்திய வீராங்கனை அஞ்சலி சர்வானி. பின்னர் கைக்கோர்த்த எல்லிஸ் மற்றும் க்ரேஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் சேர்த்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

வெறும் 16 போட்டிகளில் நம்பர் 1 வீரரான தஹ்லியா மெக்ராத்!

ஆஸ்திரேலியாவின் மூன்றாம் நம்பர் வீரரான தஹ்லியா மெக்ராத், கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அறிமுகமான 16 போட்டிகளிலேயே அவருடைய அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திருக்கும் அவர், உலகின் நம்பர் டி20 பேட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறைந்த போட்டிகளில் நம்பர் 1 வீராங்கனையாக அறிவிக்கப்பட்டதில் இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை அடைந்துள்ளார்.

15 போட்டிகளில் வெஸ்ட் இண்டிஸ் வீராங்கனை ஸ்டாஃபானி டெய்லர் அந்த சாதனையில் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஷபாலி வர்மா 18 போட்டிகளில் 3ஆவது வீராங்கனையாக உள்ளார்.

மெக்ராத் கடந்த ஆண்டு அறிமுகமானதில் இருந்து 10 இன்னிங்ஸ்களில் 485 ரன்களை அடித்துள்ளார், 149.69 ஸ்டிரைக் ரேட்டில் நான்கு அரை சதங்கள் அடங்கும்.

அறிமுக போட்டியில் நம்பர் 1 பேட்டரை முதல் விக்கெட்டாக தூக்கிய அஞ்சலி!

இன்றைய டி20 போட்டியில் அறிமுக வீராங்கனையாக களமிறக்கப்பட்டார் வேகப்பந்துவீச்சாளர் அஞ்சலி சர்வானி. வீசிய முதல் ஓவரின் 3ஆவது பந்தில் அற்புதமான டெலிவரியை வீசிய அஞ்சலி, அபாரமான இன்-ஸ்விங் பந்தில் எந்தவித க்ளூவும் கொடுக்காமல் உலகின் நம்பர் 1 வீரரை போல்டாக்கி வெளியேற்றினார். தற்போது அந்தவிக்கெட் டிவிட்டரில் பகிறப்பட்டு வருகிறது.

மெய்டன் ஓவர் ஆனால் 9 ரன்!

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசிய டார்சி ப்ரவுன் மெய்டனாக மாற்றியபோதும் 9 ரன்களை விட்டுக்கொடுத்தார். 9 ஒயிட் பந்துகளை வீசியதால் அந்த ஓவரில் 9 ரன்கள் பெறப்பட்டது.

ஷாபாலியின் முயற்சியை முறியடித்த ஆஸ்திரேலியா!

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஓபனர்களுக்கு சவால் தரும் வகையில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் 5ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். மந்தனா, ரோட்ரிக்ஸ் அவுட்டாகி வெளியேற பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்ட ஷாபாலி வர்மா அணியின் ஸ்கோரை நல்ல ரன்ரேட்டிலேயே எடுத்துச்சென்றார். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி அரைசதமடித்த ஷபாலி வர்மாவை 52 ரன்களில் வெளியேற்றினார் நிகோலா கேரி, அதற்கு பிறகு என்னதான் கேப்டன் கார் மற்றும் தீப்தி சர்மா போராடினாலும் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com